மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்...

News image

வாகனச் சோதனை - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 4:58 am

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நாளை(ஏப்ரல் 23) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Summary

Over Rs 1 Crore Seized in Pattinapakkam Chennai by flying squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.