சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தி.நகரில் சோதனை மேற்கொண்டிருந்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 28.54 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் அனைத்தும் நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Gold and silver jewelry worth Rs 29 crore seized in T. Nagar Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


