கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் விநியோகிப்பதாகவும், அங்கு தேர்தலை ரத்து செய்யக் கோரியும் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தார். அப்போது, கோவை தெற்குத் தொகுதியில் வரலாறு காணாத வகையில் பணப் பட்டுவாடா நடைபெற்று வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டி தர்னாவில் ஈடுபட்டார்.
அப்போது, காவல் துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட போலீஸôர் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், முறைகேடுகள் மலிந்துள்ள கோவை தெற்குத் தொகுதியில் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீஸôர் அதிமுகவினரை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவரிடம் வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு காரணமே, அங்குள்ள நபர்களை இங்கே அழைத்து வந்து முறைகேடுகளில் ஈடுபட வைப்பதற்குத்தான் என்று கருதுகிறேன்.
சாதாரண மக்கள் தங்களின் மருத்துவ மற்றும் திருமணத் தேவைகளுக்காக சிறிய தொகையைக் கொண்டுச் சென்றாலே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யும் நிலையில், கோடிக்கணக்கில் பணம் விநியோகிப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்றார்.
இந்தப் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதால், அங்கு நியாயமாக தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று அதிமுக வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் ஐ.இன்பதுரை எம்.பி., தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐ.இன்பதுரை எம்.பி., புதன்கிழமை மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு தடையின்றியும், மக்கள் சுதந்திரமாகவும் வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
திமுக பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
கோவை தெற்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறதா என்ற அளவுக்கு உச்சபட்ச அளவில் திமுகவினரால் அராஜகம் அரங்கேறி வருகிறது. அந்த தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணமும், தங்கமும் கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் நியாயமான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை. கோவை தெற்கு தொகுதியில் தங்கியுள்ள, தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Summary
AIADMK Candidate Staged a Dharna Demanding the Stoppage of the Election in Coimbatore South
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை தெற்குத் தொகுதியில் தோ்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக வேட்பாளா் தா்னா
ஓட்டுக்கு துட்டு! தேர்தலை ரத்துசெய்யக்கோரி அதிமுக வேட்பாளர் போராட்டம்!

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்யப்பட்டவர்கள் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



