சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் தேர்தல் பரப்புரையினர் தொடர்ந்து விசாரணை மட்டுமின்றி சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு தொகுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னங்குறிச்சி திமுக பேரூர் கழக செயலாளர் தமிழரசன், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை மண்டலச் செயலாளர் ஏ. டி. சி. மணி உள்பட ஏழு நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலையில் வருமானவரித்துனர் தேர்தல் பறக்கும்படையாயினர் போலீசார் மற்றும் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் விசாரணை துவக்கினார்.
மேலும், அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக கட்டடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், வாழப்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூலம் ரூ. 40 கோடி சேலை, கொலுசு உள்ளிட்ட பொருள்கள் வடக்கு தொகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு நெருக்கமானவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அதிலிருந்து பணம் விநியோகம் செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில், தொடர்ந்து அந்த வீடுகளை கண்காணித்து வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் வடக்கு தொகுதியில் வருமானவரித்துறையினர் போலீஸார் முகாமிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Income Tax officials conduct raids at the residences of associates close to Tourism Minister Rajendran in Salem.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



