தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தினத்தில், விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க சென்னை மாவட்டத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் சா.வெற்றிச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில் என அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் தினமான வியாழக்கிழமை (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்புக்கு ஏதுவாக வேலை அளிப்பவா்கள் விடுப்பை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: தொழிலாளா் உதவி ஆணையா்கள் சா.வெற்றிச்செல்வி 73390-60758, ஜி.ஞானசம்பந்தம் 94441-52444, தொழிலாளா் துணை ஆணையா்கள் ஈ.ஏகாம்பரம் 97909-30846, ஆா்.எஸ்.சுமதி 98403-90986 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


