தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய நாள் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இங்கு இயற்கை எழில்காட்சிகளை பார்த்து ரசித்தாலும் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பிலும், கொடைக்கானல் நகராட்சி சார்பிலும் படகு சேவை இயக்கப்படுகிறது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், இயற்கை எழில்காட்சிப் பகுதிகள், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமைப் பள்ளத் தாக்கு, பாம்பார் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று விடுமுறை அறிவிக்கவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
முன்னேற்பாடாக கொடைக்கானலைச் சுற்றியுள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
With the Tamil Nadu Legislative Assembly elections scheduled to take place on the 23rd, it has been announced that tourist spots will be closed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

எஸ்ஐஆருக்கு நன்றி!

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


