மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:38 am

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூரில் அவர் அளித்த பேட்டியில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தோல்வியடைய வைத்துள்ளனர். இது பெண்களுக்கு திமுக செய்யும் மிகப் பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலே கொன்றதற்கு ஈடான ஒரு செயலை திமுக செய்திருக்கிறது. மசோதா நகலை ஸ்டாலின் எரித்தது குறித்து தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மகளிர் மசோதாவை தோற்கடித்துவிட்டு ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார். மகளிர் மசோதாவை தடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை கொண்டாடுகின்ற முதல்வரை பார்த்திருக்கிறீர்களா?. இந்த மசோதா நிறைவேறியிருந்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்திருக்கும்.

அதில் 20 பெண்கள் 2029 தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். 2031 பேரவைத் தேர்தலிலும் 117 பெண்கள் சட்டப்பேரவைக்கு வருவார்கள். விஜய்யின் நோக்கமும் எங்கள் நோக்கமும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். விஜய் தேர்தலில் ஓரளவிற்கு வாக்குகள் பெறுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

விஜய் ஆதரவாளர்களுக்கு அன்பான் வேண்டுகோள் வைக்கிறேன். விஜய் ரசிகர்கள் விஜய்க்குத்தான் வாக்களிப்பார்கள். விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

அதன்மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும். உங்கள் நோக்கமும் வெற்றி பெறும். திமுக எதிர்க்கட்சியாகக்கூட வரக்கூடாது. அதுதான் எங்கள் நோக்கமும்கூட இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

PMK leader Anbumani Ramadoss has said that Vijay supporters should not waste their votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.