தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
''திமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மக்கள் நலத் திட்டங்களின் பெயரில் ஊழல் செய்திருக்கின்றனர். சிலர் சிறைக்கும் சென்றுள்ளனர். திமுக ஊழல் அரசை அகற்ற வேண்டும்.
கனிம வளங்களை திருடி ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் திமுக ஊழல் செய்துள்ளது. யாரையும் தொந்தரவு செய்யாத எங்களுக்கு இடையூறு கொடுத்தால் அவர்களை அடித்து விரட்டுவோம்.
திருப்பரங்குன்றத்தில் உரிய தீர்ப்பு கிடைத்தும் தீபம் ஏற்ற முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்ததும் தடை விதிக்கப்பட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம். தமிழகத்திற்கு எந்தவொரு நிதியும் கொடுக்கவில்லை என பாஜக மீது தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. மோடி அரசு ரூ. 11 லட்சம் கோடி கொடுத்துள்ளது.
நரேந்திர மோடி தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளார். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி உறுதி அளித்துள்ளார்'' என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
Summary
TN election 2026 Minister Rajnath Singh campaign in nellai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


