சட்டப்பேரவையில் விசிலடிக்க முடியாது என தவெகவை விமர்சித்து தேமுதிகவுக்கு திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "இப்போது விசிலடிக்கும் தோழர்கள் வந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் சென்று விசிலடிக்க முடியாது. தியேட்டரில்தான் விசிலடிக்க முடியும். எனவே, அவர்களை மீண்டும் தியேட்டருக்கே அனுப்புங்கள். ஒரு வாக்குகூட சிந்தக் கூடாது; சிதறக் கூடாது.
சினிமா மோகத்தால், தலித் இளைஞர்களெல்லாம் விஜய் பின்னால் செல்வதாகக் கூறுகின்றனர். அப்படிப் போகிறார்களா? தீவிர மயக்கம் கொண்டார்களா?
நீங்கள் கொள்கை வாரிசுகள்தானே? புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகள்தானே?
நமக்கு சினிமா மோகம் ஒருபோதும் கிடையாது என்பதை இந்தத் தேர்தலில் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, ஓர் ஊராட்சி மன்றத் தலைவராகக்கூட தகுதியில்லாதவர் என பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்தத் தொகுதியில் உடைந்த பாமகதான் போட்டியிடுகிறது. ஆகையால், வெற்றி உறுதியாகி விட்டது" என்று தெரிவித்தார்.
Summary
Criticizing the TVK by stating that one cannot blow whistles in the Legislative Assembly, VCK Leader Thirumavalavan campaigns for the DMDK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டி! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

