சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறாா்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னாா்கோயில் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறாா்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் பட்டியலை அக் கட்சி தலைவா் தொல். திருமாவளன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அறிவித்துள்ளாா்.
அதன்படி, விசிகவுக்கான 8 வேட்பாளர்கள் பட்டியல்:
காட்டுமன்னார்கோயில் - தொல்.திருமாவளவன்
செய்யூர் - சிந்தனைச் செல்வன்
திண்டிவனம் - வன்னி அரசு
திருப்போரூர் - பன்னீர் தாஸ்
பெரியகுளம் -ஆற்றல் அரசு
அரக்கோணம் - எழில் கரோலின்
பண்ருட்டி - அப்துல் ரகுமான்
கள்ளக்குறிச்சி - மாலதி
பத்து ஆண்டுகளுக்கு பிறகு காட்டுமன்னாா்கோயில் மீண்டும் போட்டியிடும் தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன் 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் மங்களூா் தொகுதியில் வெற்றி பெற்று பேரவைக்கு சென்றார்.
இதைத் தொடா்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காட்டுமன்னாா் கோயிலில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது அவா் சிதம்பரம் மக்களவை தொகுதியில் உறுப்பினராக உள்ள திருமாவளவன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காட்டுமன்னாா்கோயில் மீண்டும் போட்டியிடுகிறாா்.
அவா் வெற்றி பெற்றால் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை உருவாகும். மக்களவை, பேரவை தொகுதிகளில் ஏதாவதொரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரக்கூடும்.
Summary
Thirumavalavan to Contest in Kattumannarkovil VCK Candidates Announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏன்? திருமா விளக்கம்!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


