தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டதாக, தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக 2023-இல் நிறைவேற்றப்பட்டது.
ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்படுத்துவதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஏப். 15) நடைபெற்றது.
இதற்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது!
நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்துள்ளேன்.
தனிப்பட்ட மனிதர்கள் - அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை.
எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister Stalin has remarked that the sword, which had been hanging over our heads, has now descended to our necks, referring to the issue of constituency delimitation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தீ பரவட்டும், நாடாளுமன்றம் வரையில்... முதல்வர் ஸ்டாலின்
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

