திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

கோவை சிங்காநல்லூரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு...

News image

கோவை சிங்காநல்லூரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு - X / annamalai

Updated On :15 ஏப்ரல் 2026, 12:34 pm IST

தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அண்ணாமலை,

"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தபோது தமிழகத்திற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். கேரளத்தில் பிரசாரம் முடித்து கோவை விமான நிலையம் வந்த அவர் இங்கு தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. விமான நிலையம் இருக்கும் பகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அவருக்கு ஏன் பிரசாரம் செய்யவில்லை.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் இருவருக்கும் இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை. இரு கட்சிகளுக்குமே தோல்வி பயம் இருக்கிறது. தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி இங்கு வரவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும்" என்று பேசினார்.

Summary

Rahul wants the DMK to lose in upcoming election: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.