லஞ்ச ஒழிப்புத்துறை(ஊழல் கண்காணிப்புத் துறை) பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு ஐ.ஜி. துரை குமாரை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக அண்மையில் தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய உயரதிகாரிகளை நியமித்து, தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வரிசையில், தமிழக உள்துறைச் செயலராக ஐஏஎஸ் உயரதிகாரி கே. மணிவாசனை நியமித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) தமிழக ஆயுதப்படை தலைமை இயக்குநர் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்தல் ஆணைய உத்தரவின்படி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமாா் நியமித்து அரசாணை பிறப்பித்திருந்தார்.

இந்த இரு பொறுப்புகளையும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நிலையிலான ஐபிஎஸ் உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்து வந்தார்.
ஏப்ரல் 8ஆம் தேதி தாம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து சந்தீப் மிட்டலை தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை இயக்குநராக நியமிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சனிக்கிழமை புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்பை ஐ.ஜி. துரை குமாருக்கு வழங்கி உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Durai Kumar has been appointed as the Acting Director of the Directorate of Vigilance and Anti-Corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 எஸ்பி-க்களுக்கு மீண்டும் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழக பொறுப்பு ஆளுநராக ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



