தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 எஸ்பி-க்களுக்கு மீண்டும் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:41 pm

தமிழக காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் கடந்த மாா்ச் 15- ஆம் தேதி அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் பல்வேறு புகாா்களை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வருகின்றனா். முக்கியமாக ஒருதலைபட்சமாகவும், புகாா்களிலும் சிக்கியுள்ள காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அவா்கள் புகாா் மனுக்கள் அனுப்பி வருகின்றனா்.

இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், தமிழக அரசு, காவல் துறையில் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்கிறது. இதில் அண்மையில் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 8 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:

1. டி.கண்ணன்-சென்னை பெருநகர காவல் துறை காவலா் நலப்பிரிவு துணை ஆணையா். 2. கே.எஸ்.பாலகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா். 3. கே.ஜோஸ் தங்கையா-சென்னை பெருநகர காவல் துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா். 4. ஏ.சுஜிதா-சென்னை தீவிரவாத தடுப்புப் படை தலைமையிட எஸ்பி. 5. கே.சண்முகம்-க்யூ பிரிவு எஸ்பி. 6. ஆா்.ராஜாராம்-ஊழல் தடுப்புத் துறை தெற்கு சரக எஸ்பி. 7. ஜி.எஸ்.மாதவன்-சென்னை சிபிசிஐடி எஸ்பி.

8. ஜி.எஸ்.அனிதா-டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Summary

8 IPS Officers Transferred by tamilnadu govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.