தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் இலவசங்களை லஞ்சமாக வழங்கி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் வாக்களர்களுக்கு பணம், நகை, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதாகவும் இது அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இது எதிரானது என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தில் பேரவைத் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Petition filed in Supreme Court seeking cancellation of the Tamil Nadu Assembly elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


