சென்னை: தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து விவரங்களை வேட்புமனுவில் படிவம் 26-இல் தெரிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.
ரூ. 117 கோடி சொத்துக்களைக் கொண்ட மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், ரூ. 123 கோடி சொத்துக்களைக் கொண்ட டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸிக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிடவில்லை.
இதில் பல்வேறு சொத்துகள், அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜுனா மறைத்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரை முறையாக பரிசீலிக்காமல் நிராகரிக்கப்பட்டது.
எனவே எனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக நான் அளித்த புகார் மீது முறையாக விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Summary
Case Filed in High Court Against Adhav Arjuna's Nomination!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு!

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு!

முதல்வர் ஸ்டாலினை விட பல மடங்கு சொத்து! வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

