திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் யார்டு பகுதியில் ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 23:30 மணி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 06:30 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மெமு/புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் நோக்கிப் புறப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மூர் மார்க்கெட்டில் இருந்து சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் நோக்கிப் புறப்படும் புறநகர் ரயில், திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் ரயில், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையேயும், திருவள்ளூரில் இருந்து காலை 3.50 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.
இவைதவிர திருவள்ளூரில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் பொன்னேரி ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும், திருவள்ளூரில் இருந்து காலை 5.55 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Suburban train services have been changed today and tomorrow due to maintenance work at Tiruvallur railway station.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

தமிழ்ப் புத்தாண்டு: ஏப்.9-இல் திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்!

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



