மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

சென்னை புறநகர் ரயில் சேவை பழைய அட்டவணைப்படி இயக்கப்படுவது பற்றி...

News image

சென்னை புறநகர் ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 3:26 am

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் பழைய அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடைகள், தண்டவாளங்களில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூா் வழியாக நாள்தோறும் 204 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் நிலையில், பாதியாக குறைக்கப்பட்டது.

புறநகர் ரயில் சேவைகள் குறைப்பால் நாள்தோறும் வேலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இரண்டு நாள்களுக்கு முன்னதாக இன்று அதிகாலை முதலே பழைய அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என லட்சக்கணக்கானோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Summary

Chennai Suburban Train Service Restored! Operating According to Old Schedule!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.