தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான செங்கல்பட்டு துரைக்கண்ணு கோபிநாத், கடந்த 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம், முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பெருமை இவரைச் சேரும்.
இதனைத் தொடர்ந்து, இந்திய மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் அணிகளின் சார்பில் 8 டெஸ்ட் போட்டிகளிலும், 83 முதல் தர போட்டிகளிலும் விளையாடிய சி.டி. கோபிநாத், ரஞ்சி கோப்பை போட்டிகளில் மொத்தம் 2,349 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 1955 முதல் 56 வரையில் மெட்ராஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சி.டி. கோபிநாத் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று காலமானார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நீல் ஹார்வேக்கு பிறகு உலகின் 2 ஆவது மூத்த கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த சி.டி. கோபிநாத்தின் மறைவுக்குப் பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Former Indian cricketer C.D. Gopinath, hailing from Tamil Nadu, passed away at the age of 96.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!

கங்குலி பயோபிக் படப்பிடிப்பு துவக்கம்!

விமானம் ஓட்டி அசத்திய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் க்ளென் பிலிப்ஸ்!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



