மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வங்கதேச முன்னாள் வீரர் தமிம் இக்பாலை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

News image

தமிம் இக்பால் (கோப்புப் படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 2:48 pm

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வங்கதேச முன்னாள் வீரர் தமிம் இக்பாலை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

அமினுல் இஸ்லாம் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் வாரியக் குழுவை கலைத்து தமிம் இக்பால் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத் தேர்தல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அதனை விசாரிக்க 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமினுல் இஸ்லாம் தலைமையிலான கிரிக்கெட் வாரியக் குழு கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

37 வயதாகும் தமிம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மிகவும் இளம் தலைவராக மாறியுள்ளார். அவர் 11 பேர் கொண்ட குழுவை வழிநடத்தவுள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத் தேர்தலுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் வங்கதேசம் விளையாடவில்லை. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பல குழப்பங்கள் இருந்ததாகவும், அரசியல் தலையீடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது புதிய தலைவராக தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிம் இக்பால், வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட்டில் 5134 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 8357 ரன்களும், டி20 போட்டிகளில் 1758 ரன்களும் எடுத்துள்ளார்.

Summary

The Government of Bangladesh has appointed former Bangladesh cricketer Tamim Iqbal as the new Chairman of the Bangladesh Cricket Board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.