சென்னை சூப்பர் கிங்ஸில் மகேந்திர சிங் தோனி இல்லாவிட்டாலும் அந்த அணி மிகவும் வலுவான அணி என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற அனைத்து அணிகளைக் காட்டிலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் தடுமாறி வருகிறது. காயம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதும் அணியின் தடுமாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸில் மகேந்திர சிங் தோனி இல்லாவிட்டாலும் அந்த அணி மிகவும் வலுவான அணி என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹென்ரிச் கிளாசன் - படம் | AP
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்ப முடியாத அளவுக்கு பல சாதனைகளை படைத்துள்ளது. அந்த அணியில் தோனி இல்லாதபோதிலும், அவர்கள் மிகவும் வலுவான அணியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எதிரான போட்டி எளிதாக இருக்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் மிகவும் சவாலளிக்கக் கூடிய விதத்தில் விளையாடக் கூடிய அணி.
அணியில் தோனி இல்லாதது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. போட்டியில் தோனி இல்லாததல் ரசிகர்கள் சற்று அமைதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அவரது தலைமைப் பண்பை தவிர்த்து, மற்ற எந்தவொரு விஷயமும் அவர் அணியில் இல்லாததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் 5-10 பந்துகள்தான் பேட்டிங் செய்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸில் நல்ல பேட்டிங் வரிசை இருக்கிறது. ஷிவம் துபே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக விளையாடக் கூடிய தொடக்க ஆட்டக்காரர்கள் என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி ஹைதராபாதில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. அதன் பின், சென்னை சேப்பாக்கம் திடலில் மே 18 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மீண்டும் சிஎஸ்கேவுடன் மோதுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Sunrisers Hyderabad player Heinrich Klaasen has stated that Chennai Super Kings remains a very strong team, even without Mahendra Singh Dhoni.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

கிளாசன் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 227 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



