தமிழ்நாட்டில் ஒரு கொள்கை, புதுச்சேரியில் வேறு கொள்கை என திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 5) விமர்சித்தார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 5) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில்எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு அதிமுக பாடுபடும். கடும் முயற்சிகளை மேற்கொள்வோம். இரு சக்கரங்கள் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். அதேபோல மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு அரசுகள் இணைந்தால்தான் வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைந்தால்தான் புதுச்சேரிக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும்.
குழப்பமான நிலையில்தான் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. ஸ்டாலின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இடம் மாறுவார். அவர் ஒரு பச்சோந்தி.
தமிழ்நாட்டிற்கு ஒத்த கொள்கை உடைய கூட்டணியாம். அங்கு இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இங்கு அப்படியா? சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி இடம் மாறுவார் மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் ஒரு கொள்கை. புதுச்சேரியில் ஒரு கொள்கை வைத்துக்கொண்டு இரட்டை வேடம் போடுகிறது திமுக. இத்தகைய கட்சிக்கு உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.
தமிழ்நாட்டில் கொள்ளையடித்தது பத்தாது என புதுச்சேரியிலும் கொள்ளையடிக்க வருகிறது திமுக. புதுச்சேரிக்கு மு.க. ஸ்டாலின் வருவது பிரசாரத்திற்கு அல்ல. பணத்திற்காக வருகிறார். இங்கு இருக்கும் நிதியை கொள்ளையடிக்க வருகிறார்.
மக்களை வாழ வைக்கும் நோக்கம் திமுகவுக்கு இல்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக. அலைக்கற்றை மூலம் ஊழல் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் தலைகுனிய வைத்த கட்சி திமுக.
இத்தகைய நபர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு வந்து மக்கள் பணி செய்பவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் என எடப்பாடி பழனிசாமி’’ பேசினார்.
Summary
TN Election 2026 edappaadi palanisamy campaign in pudicherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



