புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள 'இண்டி கூட்டணியில் இடதுசாரிகளை சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச்செயலர் எடப் பாடி பழனிசாமி, கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம்போடுவதாக விமர்சித்தார்.
புதுச்சேரி அண்ணா திடலில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளர்கள் உப்பளம் தொகுதி ஆ.அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதி காந்தி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, லஜக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கிறது. இங்கு முதல்வராக இருக்கும் ரங்கசாமி சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளார். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை.
அப்போதுதான் தேவையான திட்டங்களும், நிதியும் கிடைக்கும். இப்பகுதியில், மீன்பிடி தொழில் அதிகமாக இருக்கிறது. மீன்பிடி தடைக் காலத்தில் தமிழ்நாட்டில் எப்படி நிதி உயர்த்திக் கொடுக்கப்பட்டதோ அப்படி புதுச்சேரியிலும் கொடுக்கப்படுகிறது.
சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற இடம் புதுச்சேரி. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள். மேலும், இங்கு சுற்றுலா வளர்ச்சியடைய மத்திய அரசு நிதியைக் கூடுதலாக ஒதுக்க அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி பெற்றுத் தருவார்கள். புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தைக் கூடுதலாகப் பெற்றுக் கொடுக்க சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் அதிமுக குரல் கொடுக்கும். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க அதிமுக பாடுபடும்.
தமிழ்நாட்டில் மதுபானத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலுக்கு வழி செய்தவர் முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் இணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணி, அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இதில் உள்ளன.
இங்கு கூட்டணியில் ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்க்கவில்லை? அதே கம்யூனிஸ்ட் கட்சிகள் தானே இங்கும் இருக்கின்றன. திமுக, காங்கிரஸ் குழப்பமான கூட்டணி. புதுச்சேரியில் கூட்டணிக்காக அந்தர்பல்டி அடித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஒரு கொள்கை. இங்கு ஒரு கொள்கை. இரட்டை வேடம். சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாறக்கூடியவர் மு.க.ஸ்டாலின் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


