சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.
பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதலாமாண்டு மாணவர்களுக்கு பூக்களை பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர். முன்னதாக, பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் கடந்த வாரம் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெற்றது. பின்னா் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 16) கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 183 அரசுக் கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 1,299 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என 1,643 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சமீபத்தில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கைகள் நடைபெற்று முடிந்தன.
இவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் இன்று தொடங்கியிருக்கின்றன. சில தனியாா் மற்றும் அரசு உதவிபெரும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளும் கடந்த வாரமே தொடங்கிவிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?

மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்! எங்கெல்லாம்?

உயா்கல்வித் துறை மீதான அன்புமணியின் குற்றச்சாட்டுகள் தவறானது - அமைச்சா் கோவி.செழியன்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


