தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள இளநிலை கலை, அறிவியல் பாடத்திட்டங்கள் குறித்து தெரிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள இளங்கலைப் படிப்புகளை மூட, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் (DCE) திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரிகள், மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சில இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைவதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளது.
இது பற்றி ஒரு கல்லூரி முதல்வர் கூறுகையில், தற்போது, தனியார் கல்லூரிகளில், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளநிலைப் படிப்புகளில் புதுமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர்ந்து ஒன்றுபோலவே படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரிகளில் வணிகம் சார்ந்த படிப்புகளையே படிக்கிறார்கள். எனவே நவீன, புதுமையான படிப்புகளில் சேர விரும்புவோர் தனியார் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தற்போது ஒருசில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல், வரலாறு மற்றும் தமிழ் போன்ற பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர் பணி வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பெரிய அளவில் பணி வாய்ப்பு கிடைக்காது என்பதால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்.
ஒருபக்கம், மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பாடத்திட்டங்களை மூடிவிட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் புதுமையான நவீன படிப்புகளை அறிமுகப்படுத்தகவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஒரு சில கிராமப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும்போது மிகக் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
Education authorities seek explanation from colleges with student admissions under 10%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிய செல்லும் முன் செய்ய வேண்டியது!

உயா்கல்வித் துறை மீதான அன்புமணியின் குற்றச்சாட்டுகள் தவறானது - அமைச்சா் கோவி.செழியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



