12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. இனி, அடுத்து கல்லூரிகளில் சேர்க்கை பெற பெற்றோரும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு படையெடுக்கும் காலம் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே, கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பெற்றோர் பலரும் ஒவ்வொரு கல்லூரியாகச் சென்று சேர்க்கை விவரங்களை கேட்டறிந்து வருகிறார்கள்.
அவ்வாறு ஒரு கல்லூரிக்குச் செல்லும்முன், பெற்றோர் அல்லது மாணவர்கள் செய்ய வேண்டியது..
ஒரு தனியார் கல்லூரியில் நிர்வாகச் சேர்க்கை முறையில் மாணவர் சேர்க்கை விவரம், கல்விக் கட்டணம் போன்றவற்றை அறிய, முதலில் அந்தக் கல்லூரியில் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில் மாணவர்களின் சேர்க்கை விவரம் பற்றிய தகவல்களை அறிய ஒரு படிவம் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
பிறகு, அந்த பூர்த்தி செய்த படிவத்தை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளலாம். அல்லது அதனை பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.
இது எதற்காக என்றால் கல்லூரிகளுக்குச் சென்றதும், அங்கே இருக்கும் ஊழியர்கள் இந்த படிவத்தைத்தான் பூர்த்தி செய்யச் சொல்லுவார்கள். சில கல்லூரிகளில் அதற்காக கணினிகளும் ஒதுக்கப்பட்டிருக்கும். சில கல்லூரிகளில் விவரங்களை சொல்ல சொல்ல பூர்த்தி செய்வார்கள். இதற்கு கால விரையம் அதிகமாகும். பிறகுதான் மாணவர் சேர்க்கை விவரங்கள் பற்றி தெரியப்பதும் ஊழியரிடம் நம்மை அனுப்புவார்கள்.
எனவே, எந்தக் கல்லூரியாக இருந்தாலும், அந்தக் கல்லூரியின் இணையதளத்தில் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து வைத்துக்கொண்டால், நேரடியாக கல்லூரிக்குள் சென்று சேர்க்கை விவரங்களை அறிந்துகொண்டு வரலாம். கால நேர விரயம் தவிர்க்கப்படும்.
மேலும், சில கல்லூரிகளில் பெற்றோரிடமிருந்து அனைத்து டிஜிட்டல் கருவிகளும் வெளியே வைக்கப்பட்டுவிட்டு, உள்ளே செல்ல அறிவுறுத்தப்படுகிறதாம். அங்கே கல்விக் கட்டண விவரங்களை மட்டும் சொல்லி வெளியே அனுப்புவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஒரு குறிப்பிட்டத் தொகையை செலுத்தி, தங்கள் பிள்ளைகளின் சேர்க்கை இடத்தை உறுதி செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்காகக் காத்திருப்பார்கள். சிலர் பொறியியல் பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வுக்காக காத்திருப்பார்கள். இன்னும் சிலரோ, காத்திருப்புகள், டென்ஷன் போன்றவற்றைத் தவிர்க்க நிர்வாக சேர்க்கை முறையில் பணம் செலுத்தி சேர்க்கை உறுதி செய்துகொள்வார்கள். இதில் அவரவர் வசதிக்கேற்ப வாய்ப்புகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

நீரிழிவு உள்ளதா? கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?

மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன் அறிய வேண்டிய 6 தகவல்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


