தமிழகத்தில் ஜூன் 29 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தாண்டு இயல்பை விட அதிக மழைபொழிவை வழங்கி வருகின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் பரவலாக கனமழை பெய்தது.
அதேவேளையில் கடந்த நான்கு நாள்களாக பகலில் வெய்யில் கொளுத்தி வரும் நிலையில், இரவில் மிதமான மழையும், அதோடு நல்ல காற்றும் நிலவி வருகின்றது. இதனிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவும் நல்ல மழைபொழிவு ஏற்பட்டது. இன்று காலையும் சிறுசிறு தூரலோடு இதமான காலநிலை மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23 முதல் 29 வரை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையை பொருத்தவரை..
ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை..
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 11 செ.மீ., சோலையார் 10 செ.மீ. சின்கோனா 9 செ.மீ., வாலைபாறை 8 செ.மீ. கொள்ளிடம் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

இந்த வாரம் வெய்யில் நிலவரம்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


