நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறைகள்: சென்னை மாநகராட்சி

உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கொண்டுவரவிருக்கிறது.

News image
சென்னையில் ஓய்வறைகள்- Center-Center-Delhi
Updated On :10 ஜூன் 2025, 11:37 am

DIN

சென்னை: சென்னையில் உணவு விநியோக ஊழியர்களுக்கான தங்கும் ஓய்வறைகள் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவிருக்கிறது.

தமிழகத்தில் முதல் முறையாக, உணவு விநியோக ஊழியர்களுக்காக அதுவும் குளிர்சாதன வசதிகொண்ட ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கே.கே. நகர், மயிலாப்பூர், தி.நகரில் ஓய்வறைகள் அமைக்கப்படும் என்றும் 600 சதுர அடியில் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வறைகளை ஒரே நேரத்தில் 25 பேர் பயன்படுத்தும் வகையிலும் வாயிலில் 20 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு விநியோக ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால், சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.