/

இரவில் கல்லறைக்கு பிரியாணி ஆர்டர் செய்த பெண்! டெலிவரி செய்ய மறுப்பு!

இரவில் கல்லறையில் இருந்தவாறு பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணிடம் சிக்கிய உணவு விநியோக ஊழியர் குறித்து...

News image
கல்லறை வாயிலில் உணவு விநியோக ஊழியர் எடுத்த விடியோ- படம் - எக்ஸ்
Updated On :2 பிப்ரவரி 2026, 2:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இரவில் கல்லறையில் இருந்தவாறு பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். இதனைக் கொண்டுவந்த உணவு விநியோய ஊழியர், அச்சத்தின் காரணமாக உணவை விநியோகிக்காமல் சென்றுள்ளார்.

கல்லறைக்கு வெளியே இருந்து அப்பெண்ணுக்கு அழைத்தபோது, நேராக உள்ளே வருமாறு அவர் கூறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த உணவு விநியோக ஊழியர், ஆர்டரை ரத்து செய்யுமாறு பணிவுடன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஒருபுறம் நகைப்பாக இருந்தாலும் உணவு விநியோக ஊழியரின் இடத்தில் இருந்து பார்த்தால், மிகவும் மோசமான அனுபவமாகவே இருக்கும் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விடியோவில் உணவு விநியோக உழியர் ஒருவர், இரவு நேரத்தில் தனது கடைசி உணவு (பிரியாணி) ஆர்டரை டெலிவரி செய்யச் செல்கிறார். அந்த இடம் நேராக கல்லறைக்கு வெளியே சென்று முடிகிறது. இதனால், பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு தொலைபேசியில் அழைக்கிறார்.

உணவு டெலிவரி செய்ய வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டதாகவும், உணவை வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். ஆனால், அப்பெண் கல்லறையின் வாயிலில் நுழைந்து நேராக வருமாறு கூறுகிறார்.

உள்ளே பார்ட்டி கொண்டாட்டத்தில் இருப்பதாகவும், பிரியாணியை கொண்டுவந்து தருமாறும் கூறுகிறார்.

இதனால் அச்சமடைந்த உணவு விநியோக ஊழியர், கண்ணியமாக உணவு ஆர்டரை ரத்து செய்துகொள்ளுமாறு கூறுகிறார். தனக்கு அச்சமாக இருப்பதாகக் கூறி அழைப்பை துண்டித்துவிட்டு அந்த இடத்திலிருந்து புறப்படுகிறார். இந்தக் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிரியாணி டெலிவரி செய்ய வந்தவர், பேய், பிசாசுகளுக்கு பிரியாணியாகியிருப்பார் என பலர் கேலியாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பார்க்க கேலியாக இருந்தாலும் உணவு விநியோகம் செய்பவரின் இடத்தில் இருந்து பார்க்கும்போது மிகவும் மோசமான அனுபவமாக இது இருந்திருக்கும் எனவும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.