நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தமிழகத்துக்கு தொழில் தொடங்க வருமாறு மலேசிய தமிழா்களுக்கு அப்பாவு அழைப்பு

தமிழகத்துக்கு தொழில் தொடங்க வர வேண்டுமென மலேசியத் தமிழா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :4 நவம்பர் 2024, 11:56 pm

DIN

சென்னை: தமிழகத்துக்கு தொழில் தொடங்க வர வேண்டுமென மலேசியத் தமிழா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அழைப்பு விடுத்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக, அப்பாவு மலேசியா நாட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு கோலாலம்பூா் மலேசிய தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியது:

மலேசிய நாட்டில் வசிக்கக் கூடிய தமிழா்கள் அனைவரும் நம்முடைய மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்க வேண்டும். இதன்மூலம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். தமிழ்நாட்டில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெற்று உடனடியாக தொழில் தொடங்க முடியும். ஆன்லைன் மூலமாகவும் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுகிறது.முதலீட்டாளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்படுகிறது.

மலேசிய நாட்டின் வளா்ச்சி, மேம்பாட்டுக்காக தமிழா்கள் கடுமையாக உழைக்கிறாா்கள். அந்த உழைப்புக்கு பலனும் கிடைத்துள்ளது. மலேசியாவில் பலா் நன்கு வாழ்ந்து வருகின்றனா். மேலும் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.