நீண்ட இழுபறிக்குப் பின்னர் புதுச்சேரி பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூத்த அரசியல்வாதியான நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். இவர் கட்டுமான பொறியியல் டிப்ளமோ பட்டம் பெற்றவர். முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளான வசந்தியின் கணவராவார்.
காங்கிரஸிலிருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸை உருவாக்கிய என்.ரங்கசாமி கடந்த 2011-இல் புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்றினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான ஆ.நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் கிரண் பேடியைச் சமாளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூத்த அரசியல்வாதியான வே.நாராயணசாமிக்கு முதல்வர் பதவியைக் காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.
அப்போது கடும் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் இரண்டாவது இடம் வழங்கியது. மேலும், புதுவை காங்கிரஸ் தலைவராகவும் தொடர்ந்து பதவி வகித்து வந்தார். ஆனால் ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வர் நாராயணசாமி கையே ஓங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டு காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்பிரமணியத்திடம் வழங்கப்பட்டது.
இது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் இடையே பனிப்போர் வெடிக்கக் காரணமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனிடையே பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் 2021 தேர்தலில் மண்ணாடிபட்டு தொகுதியிலிருந்து பாஜக சார்பில் புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு துணை முதல்வராக நமச்சிவாயம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குப் பதிலாக, முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு உள்துறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் களமிறக்கப்படுவாரா நமச்சிவாயம் என்று இருந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், புதுச்சேரி பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். நமச்சிவாயம் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவர் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் அதிமுகவின் தமிழ்வேந்தனை எதிர்கொள்கிறார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்

சகோதரர் ராகுல் விரைவில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பார்: முதல்வர் ஸ்டாலின்

கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கூட்டணி பாஜகவுடனா? தவெகவுடனா? - ரங்கசாமி பதில்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


