மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமஶ்ரீனிவாசன் வென்றதும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் போட்டியிட உள்ள நிலையில், இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வருகை தந்தார். அதற்கு முன்னதாக அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து தெற்கு மண்டல அலுவலகம் வரை திறந்தவெளி வாகனத்தில் அவருக்கு வாக்கு சேகரித்த மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ், ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதும் உடனிருந்தார்
தொடர்ந்து தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நாட்டில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தையும் திருப்பரங்குன்றத்தில் ஓட்டு வங்கிக்காக தி.மு.க. மாற்ற முயற்சித்தது. அதனால் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்கள் பிரதமர் மோடியை விரும்புகிறார்கள்.
மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றால் அவரை பிரதமர் மோடியிடம் அழைத்துச் செல்வேன். அவர் பிரதமரை சென்றடையும்போது மதுரைக்கு மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும். தமிழகத்தில் நிச்சயம் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்.
தமிழ் மிகவும் பழமையான மொழி, மற்ற மொழித்தவராலும் தமிழின் பெருமை பேசப்படுகிறது. அதேபோல தமிழ் மட்டுமின்றி இந்த நாடு மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது" என்றார்.
Summary
If BJP candidate wins, Madurai will get a Metro rail: Fadnavis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரைக்கு மெட்ரோ.. பேரம் பேசுவது மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? - ஸ்டாலின்

தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்! - ஃபட்னவீஸ் பேச்சு!

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!

மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் காங்கிரஸ்: ஃபட்னவீஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


