கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்துக்கு ஏப்.9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய நாளே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 11 பேர் அடங்கிய 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இதில் திருவனந்தபுரம் தொகுதியில் கரமன ஜெயன் போட்டியிடுகிறார். புதுப்பள்ளியில் இருந்து ரவீந்திரநாத் வகதனம், சாவரத்திலிருந்து கே.ஆர்.ராஜேஷ், சடையமங்கலத்தில் இருந்து ஆர்.எஸ்.அருண்ராஜ், பீருமேடு தொகுதியில் வி.ரதீஷ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
விவேக் கோபன் அருவிக்கர தொகுதியிலும், டிஎன் சுரேஷ் கோவளத்திலும், எஸ் ராஜசேகரன் நாயர் நெய்யாற்றின்கர தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மாவேலிக்கர தொகுதியில் அஜிமோனும், சிராயின்கீழ் தொகுதியில் பி.எஸ்.அனூப்பும், அடூர் தொகுதியில் பந்தளம் பிரதாபனும் போட்டியிடுகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக ஏற்கெனவே முதல்கட்டமாக 47 வேட்பாளர்களும், 2ஆம் கட்டமாக 39 வேட்பாளர்களும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The BJP on Saturday released its third list of 11 candidates for the Kerala Assembly Polls, fielding Karamana Jayan from Thiruvananthapuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இருப்பை வலுப்படுத்தும் பாஜக!

திருவனந்தபுரத்தில் கரமன ஜெயனை களமிறக்கும் பாஜக!

கேரள தேர்தல்: பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



