தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியோர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 5-ல் 1 வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மொத்த வேட்பாளர்களில் கால் பங்கு கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய ஆய்வை வெளியிட்டனர்.
மொத்தமுள்ள 4,023 வேட்பு மனுக்களில் 3,992 பேரின் வேட்பு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 722 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 18%. கடந்த 2021 தேர்தலில் 466 (13%) பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருந்த நிலையில் இந்த முறை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோன்று, கடுமையான குற்றவியல் வழக்குகள் 404 (10%) பேர் மீது பதியப்பட்டுள்ளன. இது, 2021-ல் 207 (6%) ஆக இருந்தது.
கோடீஸ்வர வேட்பாளர்கள் மொத்தம் 981 பேர் இந்த முறை போட்டியிடுகின்றனர். இது 2021-ஐ விட 7% அதிகம். இதில், திமுகவில் அதிகபட்சமாக 170 பேரும், அதிமுக-வில் 160 பேரும், தவெக-வில் 156 பேரும் உள்ளனர். அடுத்ததாக, பாஜக 31, காங்கிரஸ் 27, பாமக 16, தேமுதிக 10, சிபிஐ 3 என்ற எண்ணிக்கையில் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் இந்தமுறை போட்டியிடும் 3,992 வேட்பாளர்களின் மொத்த சொத்துமதிப்பு ரூ. 20,678 கோடி. இதில், அதிக சொத்துக்களுடன் லீமாரோஸ் மார்ட்டின், ஜோசப் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோய் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
கல்வி ரீதியாக பார்க்கையில் 1,711 (43%) வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 1,822 (46%) பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை படித்துள்ளனர். 301 பேர் டிப்ளமோ, 95 பேர் படிக்காதவர்கள், 56 பேர் எழுத்தறிவு உள்ளவர்கள் மற்றும் 7 பேர் படிப்பு விவரங்களைத் தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வயதுவாரியாக 1,424 (36%) பேர் 25-40 வயதுக்குள்பட்டவர்கள், 2,034 (51%) பேர் 41-60 வயதுக்குள்பட்டவர்கள், 526 (13%) பேர் 61-80 வயதுக்குள்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் 442 (11%) பேர் போட்டியிடுகின்றனர். இது 2021 தேர்தலில் இருந்த 378 (11%) அதே சதவீதத்துடன் உள்ளது.
Summary
Nearly one in five candidates in Tamil Nadu has declared criminal cases.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 1.39 கோடி பெண் வாக்காளர்கள்... ஆனால், களத்தில் வெறும் 40 பெண் வேட்பாளர்கள்!

பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார்யார்?

அஸ்ஸாம் தேர்தலில் பாஜகவில் களமிறங்கும் பெண் வேட்பாளர்கள்!
1,033 வேட்பாளர்கள்! தேர்தல் சீர்திருத்தத்துக்கு வித்திட்ட மொடக்குறிச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


