/

திருப்பதியில் 10 நாள்கள் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த 10 நாள்களில்   ரூ. 40.18 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:26 pm

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த 10 நாள்களில்   ரூ. 40.18 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்துள்ளது. வைகுண்ட வாயில் திறந்திருக்கும் நாள்கள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. 

சொர்க்கவாசல் வழியாக கடந்த 10 நாள்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

இவர்களில் 2.13 லட்சம் பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.