தஞ்சாவூர்: தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் (அரசியல் சார்பற்றது) சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கோரும் மத்திய அரசின் மின்வாரிய ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சனிக்கிழமை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல். பழனியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை காவல்துறையினரின் தடுப்புகளை அகற்றிக் கொண்டு, உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனர். சுமார் 5 நிமிட போராட்டத்துக்கு பிறகு அதில் ஈடுபட்ட சுமார் 60 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் ரயில் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

சரித்திர சாதனைகள் படைத்து வரும் திமுகவுக்கு வாக்களியுங்கள்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் கூடுதல் பொது மேலாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



