சென்னை நகரின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் விரைவில் வழங்கக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினா் ரா.கிரிராஜன் வலியுறுத்தினாா்.
இது குறித்து மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் திமுக எம்பி கிரிராஜன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது வருமாறு:
சென்னை பெருநகரின் நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் 2 -ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் 118.9 கிமீ தூரத்திற்கு அமைக்க தமிழக அரசு முன்மொழிந்தது. இந்த 2 ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ. 61,843 கோடி மதிப்பிடப்பட்டு செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்தது.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு வெளிப்புற (கடன்) நிதியுதவியாக ரூ. 33,594 கோடியை தன் பங்காக முன்மொழிந்துள்ளது. இதில் 52 கிலோ மீட்டா் தூரத்திற்கு ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமையில் (ஜெய்கா)இருந்தும் (சுமாா் ரூ. 20,196 கோடி), மற்றும் 66.89 கிமீ தூரத்திற்கு ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்தும் கடன் பெறுவதும் அடங்கும்.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்த்து தமிழக அரசு இந்த திட்டத்திற்கு செலவிட்டுவருகிறது.
நிகழ் நிதியாண்டில் ரூ. 10,000 கோடி தமிழக அரசு ஒதுக்கியது.
ஆனால் இந்த திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதோடு மத்திய அரசு இந்த திட்டத்திற்கு நிதி உதவியும் அளிக்கவில்லை.
மாநில அரசுக்கு இணையாக மத்திய அரசு நிதியை விடுவிக்க தவறினால் இரு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உரிய காலத்தில் கடனுதவி விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மத்தியஅரசின் பொருளாதார மதிப்பீட்டுக்குழு விரைந்து ஒப்புதலை வழங்கி, ஜெய்கா, ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து உரிய நேரத்தில் கடனுதவியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என கிரிராஜன் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

ஆறுமுகனேரி பேரூராட்சி அவசரக் கூட்டம்

ரூ.1,975 கோடியில் முக்கிய 3 மேம்பாலங்கள் திறப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

