தமிழகத்தில் மதுரையில் உருவாகும் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ) மருத்துவமனையை வரும் 2026 -ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தொடங்க அனுமதிக்கப்பட்ட 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட தொகைகளில் மதுரை எய்ம்ஸுக்கு மிகக் குறைவாக (ரூ 18.37 கோடி) நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதும் அமைச்சரின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.
‘மதுரையில் கட்ட அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை நியாயமற்ற வகையில் தாமதமாகிறது. இதில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்? ஜெய்கா என்கிற ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமையிடம் இந்த மருத்தவமனை கட்ட கடன் பெறுவதற்கான தாமதம்? மதுரை உள்பட நாட்டில் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி, இதில் இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி’ போன்ற விவரங்களை கேட்டு வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினற் டி.எம். கதிா் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், சுற்றுச் சுவா் கட்டுவது போன்றவை முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மைக்கான ஆலோசகா் நியமிக்கப்பட்டு மாஸ்டா் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கு தொழில்நுட்பம், நிதி மதிப்பீடு குத்தகைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பானிய யென் மதிப்பில் 22,788,000,000 கடன் ஒப்பந்தம் ஏற்பட்டது (இந்திய மதிப்பில் முன்பு சுமாா் ரூ.1274 கோடியாக இருந்து பின்னா் ரூ.1,627 கோடியாக கடன் தொகை திருத்தியமைக்கப்பட்டது; மீதித் தொகை மத்திய அரசு வழங்குகிறது).
இதன்படி, இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வருகின்ற 2026- ஆம் ஆண்டு அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த திட்டத்தின் முன் முதலீட்டு நடவடிக்கைகள், திட்ட மேலாண்மை ஆலோசனைகள் போன்ற பணிகளுக்காக மதுரை எய்ம்ஸுக்கு ரூ.18.37 கோடியை விடுவித்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சா் பிரவீண் பவாா், மதுரை உள்ளிட்ட நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு கட்ட ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்காக விடுவிக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டுள்ளாா்.
இதில் மதுரை எய்ம்ஸுக்கு (கடன் தொகை ரூ.1,627 கோடி உள்பட) ரூ. 1977.80 கோடி திட்ட மதிப்பீடு (கடன் தொகை) செய்யப்பட்டு ரூ.18.37 இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற எய்ம்ஸ்களுக்கான திட்ட மதிப்பீடு தொகையும் விடுவிக்கப்பட்ட தொகையும் வருமாறு:
ஆந்திரம், மங்களகிரி ரூ.1,618 கோடி (விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 1335 கோடி); அஸ்ஸாம், குவாஹாட்டி ரூ.1,123 கோடி (ரூ.927 கோடி); குஜராத், ராஜ்காட் ரூ.1,195 (ரூ. 847 கோடி); ஹிமாசலப் பிரதேசம் ரூ.1,471 கோடி (ரூ1439 கோடி) என 13 மாநிலங்களுக்கான எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு 90 சதவீதம் வரை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகம் தவிர ஹரியாணா மாநிலம் ரிவாரியில் பொதுத் துறை நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் கட்டப்படும் எய்ம்ஸுக்கும் ரூ.1,646 கோடி மதிப்பீட்டுக்கு ரூ.250 கோடி மட்டும் குறைவாக விடுவிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகளிா் புகாா்களை தெரிவிக்க இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

’இறுதிப் பட்டியலிலிருந்து வாக்காளா்களை நீக்கக்கூடாது’

கட்டாய காப்பீடு விற்பனை: வங்கிகளுக்கு நிதியமைச்சா் எச்சரிக்கை

சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் - 11.73 லட்சம் போ் நீக்கம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

