ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு!
சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.


சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, ஆக. 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார்.
அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார் என்றும் திமுக கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
முன்னதாக, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.
அதேநேரத்தில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...