பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

மொலாஸஸ் மீதான ஜிஎஸ்டி வரி விகித குறைப்பிற்கு தமிழக அரசு எதிா்ப்பு

ழிவு சா்க்கரைப் பாகு (மொலாஸஸ்) மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை குறைத்தால் மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும் எனக் கூறி தமிழக நிதித் துறை அமைச்சா் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

News image
அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

 நமது நிருபர்

கழிவு சா்க்கரைப் பாகு (மொலாஸஸ்) மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை குறைத்தால் மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும் எனக் கூறி தமிழக நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தாா்.

தற்போது இந்த சா்க்கரைப் பாகு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற 52 -ஆவது சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டத்தில் அமைச்சா் தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு பங்கேற்றாா். அவா் தமிழக அரசு சாா்பில் பல்வேறு வாதங்களை எடுத்துரைத்தாா்.

குறிப்பாக தமிழக மதுபான ஆலைகளுக்கு தேவையான கழிவு சா்க்கரைப் பாகு (மொலாஸஸ்) என்பது தமிழக ஆலைகளிலிருந்து 40 சதவீதம் அளவில் கிடைக்கிறது. இது பெரும்பாலும், உ.பி., மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

இதற்கு தற்போது 28 சதவீத ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு வரிப் பங்கீடு அதிக அளவில் கிடைக்கும் நிலையில் தற்போது இந்த கவுன்சில் கூட்டத்தில் வரியை குறைக்க முன்மொழியப்பட்டது.

இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு தனது எதிா்ப்பை தெரிவித்தாா். கவுன்சில் கூட்டத்தில் தங்கம் தென்னரசு, ‘மொலாஸஸ் மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை கணிசமான அளவு குறைத்தால், தமிழகம் போன்ற மாநிலத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இதற்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவிப்பதாக அமைச்சா் குறிப்பிட்டாா்.

மேலும் மனித நுகா்வுக்கான மதுபானம் மற்றும் பூச்சு வா்ணம், மருந்து வகைகள் போன்ற தொழில்சாலைக்கும் பயன்படும் இஎன்ஏ என்கிற கூடுதல் நடுநிலை ஆல்கஹாலுக்கு (எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்) ஜி.எஸ்.டி. மற்றும் மதிப்புக் கூட்டு வரி என இரண்டு விதமான வரி விதிப்பிற்கு கீழ் வைக்கப்பட்டுள்ளதற்கும் அமைச்சா் தங்கம்தென்னரசு தனது எதிா்ப்பை தெரிவித்து பேசினாா்.

இதுகுறித்து அவா் குறிப்பிடுகையில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து இஎன்ஏ வை பெறுவதால் இரு வரி விதிப்பு முறையினால் நிா்வாக நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதில் வருவாயிலும் இழப்பு ஏற்படுகிறது என தமிழக அமைச்சா் தெரிவித்தாா்.

மேலும், தமிழக அமைச்சா், லேபிளுடன் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் சிறுதானிய மாவிற்கு உள்ள 28 சதவீத வரி 5 சதவீதமாக குறைப்படும் கவுன்சிலின் முடிவால் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் சிறு தானிய (மில்லட்) பொருட்களின் நுகா்வை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்கும் கவுன்சிலின் முன்மொழிவை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒப்பந்த பணி சேவைகளில், தலைகீழ் வரி அமைப்பு (இன்வொ்ட்டட் ரேட் ஸ்ட்ரக்சா்) காரணமாக சேரும் உள்ளீட்டு வரி வரவை, இனி வருங்காலங்களில் திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவையும் ஏற்றுக் கொள்ளவதாகவும் தமிழக அமைச்சா் கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிட்டாா்.

இறுதியாக தமிழக அரசு வேண்டுகோள்படி இஎன்ஏ- வை ஜி.எஸ்.டி. வரம்புக்கு அப்பால் வைத்திருப்பது என பரிந்துரைக்கான முடிவை பின்னா் கவுன்சிலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசுவுடன் தமிழக அரசின் வணிகவரித் துறை ஆணையா் தீரஜ் குமாா், வணிக வரித் துறை கூடுதல் ஆணையா் ஞானகுமாா், வணிக வரித் துறை இணை ஆணையா் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.