டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சேலத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

News image
[தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலம் மாநகர காவல் ஆணையர் பா.விஜயகுமாரி. உடன் துணை ஆணையர் எஸ்.பி.லாவண்யா மற்றும் காவல் துறை அதிகாரிகள்.
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

சேலம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

தினமணி மற்றும் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஸ்ரீ சரவண பவன் குரூப் மற்றும் ஸ்பார்டா சார்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

Story image

கோடை வெயிலில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் வழங்கும் வகையில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி கடந்த 2018 முதல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, சேலம் ஆட்சியர் அலுவலகம் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பா.விஜயகுமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை வழங்கினார்.

Story image

சேலம் நகரப் பகுதியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பி.லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர்கள் வெங்கடேசன் (சேலம் நகரம்),  உதயகுமார் (போக்குவரத்து), சேலம் நகர ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா, உதவி ஆய்வாளர் பழனிசாமி (போக்குவரத்து), விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையர் மருத்துவர் பி.செந்தில்குமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை மற்றும் தருமபுரி பதிப்புகளின் முதன்மை மேலாளர் க.தியாகராஜன், தருமபுரி பதிப்பு வர்த்தகப் பிரிவு துணை மேலாளர் பா.பிரதீஷ், விற்பனை பிரிவு உதவி மேலாளர் வி.எஸ்.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.