டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன்!

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

News image
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:08 pm

DIN

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு  டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கச் சென்ற  பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் 2021-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்தனர். 

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2021, ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். சுமார் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், முன்னாள் தலைமைச் செயலர், முன்னாள் உள்துறைச் செயலர், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி என 68 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சாட்சியங்கள் அளித்த தகவலின்படி முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இருவரும் பதிலளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம்.புஷ் பராணி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆஜராகவில்லை. 

தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்குரைஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். 

அவரைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் ரவீந்ததிரனும், முன்னாள் எஸ்.பி. தரப்பு வழக்குரைஞர் ஹேமச்சந்திரன் ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.

வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி எம். புஷ்பராணி, ஜூ ன் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எம்.புஷ்பராணி இன்று காலை தீர்ப்பளித்தார். 

இந்நிலையில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.