டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்: கொங்கு கல்வி நிலையம் மாணவ, மாணவிக்குப் பாராட்டு

News image
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளித் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவி தங்கம் வென்றாா்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டி பிரிவில் தங்கம் வென்ற 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.காசிவிசாலாட்சியைப் பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.

மேலும், டாமன்டையூவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவா் நிரஞ்சன் சாய் மூன்றாம் பரிசு பெற்றுள்ளாா். இவருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எம்.தெய்வசிகாமணி, எஸ்.கே.சோமசுந்தரம், இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.