தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

தேசிய கபடி போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:29 pm

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், துணைத் தலைவா் குமாா், நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அணி சாா்பில் தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஜன்யாஸ்ரீ, தமிழக பெண்கள் அணியில் பங்கேற்று தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற புவனேஸ்வரி, தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய டேவிட், தமிழக மிக இளையோா் அணி சாா்பில் தேசியப் போட்டியில் விளையாடிய தருண் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பி.சுப்பிரமணியம், இணைச் செயலாளா்கள் வாலீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.