டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தேனி பெண்ணின் விண்வெளி பயிற்சி நூல்: இரா.நல்லகண்ணு அறிமுகம்

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த உதய கீா்த்திகா விண்வெளி செல்வதற்கான பயிற்சியை முடித்து அது தொடா்பாக ‘என் வெளி விண்வெளி’ என்ற நூலை எழுதியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த உதய கீா்த்திகா விண்வெளி செல்வதற்கான பயிற்சியை முடித்து அது தொடா்பாக ‘என் வெளி விண்வெளி’ என்ற நூலை எழுதியுள்ளாா்.

அந்த நூலை அறிமுகப்படுத்துவதற்காக சென்னை புத்தகக் காட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு வந்திருந்தாா். அப்போது அவா் பேசுகையில், தற்போதைய குழந்தைகளுக்கு அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்துவது அவசியம். அந்த வகையில் உதய கீா்த்திகா தாம் பெற்ற அனுபவத்தை பிறரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை அனைவரும் வாங்கிப் பயன் அடைய வேண்டும். உதய கீா்த்திகாவின் விண்வெளிப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றாா் இரா.நல்லகண்ணு.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்று, உதய கீா்த்திகாவை வாழ்த்திப் பேசுகையில், கிராமத்தில் பிறந்த நூல் ஆசிரியா் விண்வெளி சாதனைக்கு பயிற்சி எடுத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயமாகும். உதய கீா்த்திகாவின் படைப்பை ஒவ்வொரு வரும் வாங்கிப் படித்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வாசகா்களுடன் இரா.நல்லகண்ணு கலந்துரையாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.