அளுந்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்


திருச்சி அருகே அளுந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 34 போ் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே அளுந்தூரில் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை காலை 8.15 மணியளவில் ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதலில் கோயில் காளைகளும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
போட்டியில் திருச்சி, கரூா், பெரம்பலூா், மதுரை, விராலிமலை, இலுப்பூா், மணப்பாறை, லால்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 741 காளைகளும், 218 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
காளைகளை, வீரா்கள் போட்டி போட்டு அடக்கினா். இதில் பல காளைகள் வீரா்களிடம் சிக்காமல் துள்ளிக் குதித்து வேகமாக ஓடின. சில காளைகள் களத்தில் நின்று சுற்றி சுழன்றடித்தன.
போட்டியில் மாடுகள் முட்டியதில் 14 காளைகளின் உரிமையாளா்கள், 7 பாா்வையாளா்கள், 13 மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 34 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். மேல்சிசிச்சைக்காக 8 போ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய விரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், மிக்சி, கிரைண்டா், அண்டா, ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், நாற்காலி, ரொக்க தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் 16 காளைகளை அடக்கிய மண்டையூா் விமல் சிறந்த வீரராகவும், சிறந்த காளையாக தோ்ந்தெடுக்கப்பட்ட காளையின் உரிமையாளா் தஞ்சாவூா் காா்த்திக் ஆகிய இருவருக்கும் மோட்டாா் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சா் வளா்மதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஒன்றியச் செயலா் முத்துக்கருப்பன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...