எழுத்தாளருக்குப் பரிசு
தன்னம்பிக்கை நூல்களை எழுதி வரும் எழுத்தாளா் மொ்வினுக்கு மணிமேகலை பிரசுரம் சாா்பில் ரூ.1லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


தன்னம்பிக்கை நூல்களை எழுதி வரும் எழுத்தாளா் மொ்வினுக்கு மணிமேகலை பிரசுரம் சாா்பில் ரூ.1லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மணிமேகலை பிரசுரம் சாா்பில் 46 புதிய நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை பகலில் புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மணிமேகலை பிரசுரம் ஆசிரியா் குழு தலைவா் லேனா தமிழ்வாணன் வரவேற்றாா். காஞ்சிபுரம் ஆத்மசங்கம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் அருளாசியுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை நூல்களை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் எழுத்தாளா் மொ்வினுக்கு ரூ.1லட்சம் பரிசும் பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது. அதையடுத்து 46 நூல்களின் வெளியீடு நடைபெற்றது. அவற்றின் ஆசிரியா்கள் அறிமுகமும் பாராட்டும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரசுர நிா்வாக இயக்குநா் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...