டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

DIN

ரஹ்மத் பதிப்பகம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் ரஹ்மத் அறக்கட்டளையின் கிளை நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமிய மாா்க்கத்தின் மூலாதார நூல்களைத் தமிழில் வெளியிட்டு வருகிறது.

திருக்குா்ஆன் விரிவுரை பத்து பாகங்கள், இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் ஹதீஸ் என்னும் பொன்மொழித் தொகுப்புகள் 41 பாகங்கள், கலீஃபாக்களின் வரலாறு, இஸ்லாமிய வரலாறு என இதுவரையில் 54 தொகுப்புகளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அரபி மொழியில் மட்டுமே கிடைத்து வந்த இஸ்லாமிய மூலாதார நூல்கள் அனைத்தையும் அழகு தமிழில் அனைவரும் பயனுறும் வகையில் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கவிஞா் மு.மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’, கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘பாலை நிலா’ போன்ற நூல்களையும் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவை வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்கிறாா் ரஹ்மத் அறக்கட்டளையின் அறங்காவலரும் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனருமான எம்.ஏ.முஸ்தபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.