தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இடுகாட்டுக்கு நடுவில் பொதுக்கழிப்பறை: மக்களுக்கா? சடலங்களுக்கா?

வேலூர் மாவட்டம் கனியம்பாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கம்மசமுத்திரத்தில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத பட்டியலினத்தவருக்காக இடுகாட்டுக்கு மத்தியில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 11:20 am

வேலூர்: வேலூர் மாவட்டம் கனியம்பாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கம்மசமுத்திரத்தில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத பட்டியலினத்தவருக்காக இடுகாட்டுக்கு மத்தியில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

கம்மசமுத்திரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் கழிப்பறை கட்ட வசதி இருந்த 50 சதவிகித வீடுகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. 

மற்ற வீட்டினர் அக்கம் பக்கத்து வீட்டினரின் கழிப்பறை அல்லது திறந்தவெளியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், மற்ற குடும்பங்களுக்கு பொதுக்கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டுக்கு மத்தியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

Story image

இதையும் படிக்க.. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு

இது குறித்து அந்த கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுவும் அந்த கழிப்பறை பூட்டி, கிராமத்தில் உள்ள தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரிடம் சாவியை வாங்கி வந்து ஒரு கிலோ மீட்டர் சென்று பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இரவு நேரத்தில் பெண்களும் சிறுமிகளும் இடுகாட்டுப் பகுதிக்குச் செல்ல அச்சம் அடைந்து கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து மக்கள் கேட்பது என்னவென்றால், அந்த பொதுக்கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கா? அல்லது சடலங்களின் பயன்பாட்டுக்கா? பிறகு ஏன் இடுகாட்டில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இது குறித்து ஆராய்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.