சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோவையில் கல்லறை திருநாள்: அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை!

கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:43 am

DIN


கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. 

இதையடுத்து கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம். 

இந்நிலையில், கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து வர்ணம் பூசியும் அலங்கரித்து பின்னர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.